Paralympics 2024: பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறவுள்ளன. இந்த முறை, இந்தியா சார்பில் மொத்தம் 84 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதில் 52 வீரர்கள் மற்றும் 32 வீராங்கனைகள் இடம் பெறவுள்ளனர். ஒப்பீட்டளவில், 2020 பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 54 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை மட்டுமே அனுப்பியிருந்தது.
இந்தியா, 1972-ம் ஆண்டு முதல் பாராலிம்பிக்கில் பங்கேற்று வருவதோடு, அப்போது கிடைத்த முதல் பதக்கம் தங்கப்பதக்கமாக அமைந்தது. அதன் பிறகு, 1984-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ளது. 1984-ல் இந்தியா 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றது. Paralympics 2024
அதன் பின்பு, 2004-ல் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம் வென்றது. 2012-ல் ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றது. 2016-ல் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்று, அதுவரை இந்தியாவின் சிறந்த செயல்பாடாக அமைந்தது.
2020 டோக்கியோ பாராலிம்பிக்கில், யாரும் எதிர்பாராத விதமாக இந்தியா 19 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் Paralympics 2024-வது இடத்தை பிடித்தது. அதில் 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இந்த மிகப்பெரிய வெற்றியின் பின்னணியில், 2024 பாராலிம்பிக்கிற்கு கூடுதல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இம்முறை, இந்தியா மேலும் அதிக பதக்கங்களை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.